விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும் சில சமயங்களில் நீண்ட நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?