முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2026-02-22 15:55 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த பொன்னன்படுகையில் இருந்து குமணன்தொழு செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்