வீடுகளுக்கு மேல் செல்லும் மின்கம்பிகள்

Update: 2026-01-04 11:51 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகர் பகுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இதன் அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பல வீடுகளின் மேல் உயரழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மின்விபத்து ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த உயரழுத்த மின்கம்பிகளை இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்