மதுரை தபால் தந்தி நகர் பாமா நகர் அருகே உள்ள மல்லிகை 3-வது தெருவில் சில நாட்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பொதுமக்களிடையே திருட்டு மற்றும் விபத்து அச்சம் எழுந்துள்ளது. எனவே மின் விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.