கீரப்பாளையம் அருகே இந்திரா நகர் 2-வது தெருவில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு மின்விளக்குகள் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.