உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-02-15 13:45 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த இடத்தில் நிற்கவும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அந்த இடத்தில் நாய்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே உயர்கோபுர மின் விளக்கை உடனடியாக சரி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்