கச்சிராயப்பாளையம் அருகே பொட்டியம், கல்படை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்ய மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.