திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து ஜங்ஷன் பகுதிக்கு வரும் சாலையில் தெருவிளக்கு ஒன்று உள்ளது. இந்த தெருவிளக்கிள் அருகில் அரவாகன ஓட்டிகள் அவதிசமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த அரசமரத்தின் கிளைகள் நன்கு வளர்ந்து தெருவிளக்கை மறைத்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே தெருவிளக்கை மறைத்துள்ள கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.