பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், கேபிள் டி.வி. ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் அச்சத்துடனே செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி கேபிள் ஒயர்களை உயர்த்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்பொதுமக்கள், பர்கூர்.