கோவை ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையோரங்களில் போதிய தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இருந்தாலும், இரவில் சர்வீஸ் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். இருட்டை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சர்வீஸ் சாலையில் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.