சேவூர் குலாலர் வீதியில், சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் இந்த கம்பத்தில் தெரு விளக்கு உள்ளது. ஆனால் தெருவிளக்கின் வெளிச்சம் சாலைகளில் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பத்தில் உள்ள செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமமூர்த்தி, சேவூர்.