கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அக்ரஹாரம், முல்லை நகர் பகுதிகளில் தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரிவதில்லை. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கிருஷ்ணகிரி சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பெரியசாமி, முல்லை நகர், கிருஷ்ணகிரி.