தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து கிராம ஊராட்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரியவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவீந்திரன், மெணசி.