மேட்டூர் அணை வட்டம் ராமன் நகர் பகுதி கெம்ப்ளாஸ்ட் 2-வது கேட் எதிரில் பூங்காவிற்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. வேகமாக காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-செந்தில் முருகன், மேட்டூர்.