மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2025-08-24 14:07 GMT

தாரமங்கலம் ஏ.டி.சி. பஸ் டெப்போ மற்றும் அய்யனாரப்பன் கோவில் அருகே பைபாஸ் 4 வழி சாலையாக உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்குகள், வேகத்தடைகள் மீது ஒளிரும் பட்டைகள், எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சசி, தாரமங்கலம்.

மேலும் செய்திகள்