ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சி சின்ன கணக்கம்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், நொச்சிப்பட்டி.