ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-08-10 17:35 GMT

மருதமலை ஐ.ஓ.பி. காலனி பாலாஜி நகரில் உள்ள பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அங்கு மின்கம்பங்களில் பொருத்தப்பட்டு உள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இருட்டை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே ெதருவிளக்குகளை பழுது நீக்கவும், அந்த பாலத்தை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்