உடுமலை ருத்திரப்ப நகர் பகுதி 3-வது வீதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை, திருடர்கள் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.