கோவையை அடுத்த மத்வராயபுரம் அருகே இருட்டுப்பள்ளம் குறிஞ்சி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 5 இடங்களில் குழி தோண்டி இரும்பு மின்கம்பங்களை நட்டனர். ஆனால் குழியை முறையாக மூடவில்லை. இதனால் காற்றில் அந்த மின்கம்பங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பங்களை முறையாக நட அதிகாரிகள் முன்வர வேண்டும்.