நாமக்கல் மாவட்டம் நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்கல் கரடு பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் பல மாதங்களாக அந்த சாலை இருள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் கடும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-சசி, நரிக்கல் கரடு.