சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை அருகில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கோவில் வளாக இடத்தில் மண் கொட்டி மேடை செய்யப்பட்டதால் டிரான்ஸ்பார்மர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக டிரான்ஸ்பார்மரில் கையை வைத்தால் ஆபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு தாழ்வாக உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விஷ்வா, தேவூர்.