தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தை ஒட்டி வடக்கு பகுதியில் தார்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக அருகே உள்ள அரசு அலுவலகங்கள், கிடங்கு, வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பட்டாளம்மன் கோவில் பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
-மனோகரன், தர்மபுரி.