ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செலவடை செல்லும் வழியில் தோரமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த பகுதியில் எந்தவித வெளிச்சமும் இல்லாத காரணத்தால் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. மேலும் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் வெளிச்சம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் உயரமின் கோபுர மின்விளக்கு மற்றும் வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-பெருமாள், தாரமங்கலம்.