பெருமாநல்லூர் ஊராட்சி உட்பட்ட பனங்காடு, பொடாரம்பாளையம், வலசு பாளையம் பிரிவு, பொரசுப்பாளையம், ஈ.பி ஆபிஸ் ரோடு, சி.எஸ்.ஐ. காலனி ரோடு ஆகிய பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தடை ஏற்படுகிறது. சில இடங்களில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஓரிடத்தில் மின் கம்பி தாழ்வாக சென்று கொண்டிருக்கிறது. விபத்துகள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட மின்சார அதிகாரிகள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.