கொல்லிமலையின் வரவேற்பு கிராமமாக சோளக்காடு திகழ்கிறது. அங்கிருந்து எட்டுக்கை அம்மன், அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை அருகே நம் அருவி காணப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் அந்த அருவியை கண்டு ரசித்தும், குளித்து மகிழ்ந்தும் செல்வார்கள். இந்த நிலையில் இரவு நேரத்தில் அந்த அருவியின் அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே நம் அருவி அமைந்துள்ள சாலையின் மேல் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-சுரேஷ், கொல்லிமலை.