பாலக்கோடு அடுத்த சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் கடந்த 6 மாதங்களாக எரியாமல் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளது. இதன் காரணமாக கூட்ரோட்டில் வரும் வாகனஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்சி பொருளாக உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமே!
-சரவணன், திம்மம்பட்டி.