ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-04-20 11:09 GMT

கீழவண்ணான்விளை ஆற்றங்கரை அருகில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றிங்கரையில் போடப்பட்டுள்ள இந்த மின்கம்பத்தின் அஸ்திவாரம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்