சேலம் 4 ரோட்டில் 16-வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு அருகே உள்ள மின்கம்பம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாய்ந்தது. இந்த மின்கம்பமானது தற்போது வரை சரிசெய்யப்படாமல் இந்த பணி கிடப்பில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மழையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவக்குமார், 4 ரோடு.