தாழ்வான மின்கம்பிகள்

Update: 2025-04-06 16:43 GMT

பர்கூர் தாலுகா அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்ரூர், நாயக்கனூர் மற்றும் மேல்கோட்டாய் ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட விவசாய நிலங்களில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் வயல்களுக்கு செல்ல அச்சம் அடைகின்றனர். இதனால் மின் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி மினகம்பிகளை உயர்த்தி அமைத்து தர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், பர்கூர்.

மேலும் செய்திகள்