கோவை மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் 6-வது குறுக்கு தெரு லட்சுமி கார்டன் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. அவை வீடுகளை தொட்டவாறு செல்வதால், அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பலத்த காற்று வீசும்போது அவை வீடுகள் மீது உரசி மின் விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே உயிரிழப்பு ஏதேனும் ஏற்படும் முன்பு, அங்கு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.