எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலையோரத்தில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் காற்று, மழை நேரங்களில் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் மற்ற மின்கம்பங்கள் சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் மின்கம்பத்தை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்து நேரும் முன்னரே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, நாமக்கல்.