எரியாத மின்விளக்குகள்

Update: 2025-03-09 16:47 GMT

சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் புறவழிச்சாலை பிரிந்து செல்லும் பகுதி உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு ஒருபுறம் எரிந்தும் மறுபுறம் எரியாமலும் உள்ளது. இதனால் நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி வழியாக வாகனங்களில் செல்வோர் இருட்டில் பயணம் செய்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி அங்குள்ள உயர் கோபுர மின்விளக்கை முழுவதுமாக எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்