ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-03-09 16:37 GMT

பாலக்கோடு கடைவீதியில் உரக்கடை முன்பு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் சாலையோரம் போக்குவரத்திற்கு இது இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் ஏற்படுகின்றன. தர்மபுரி-ஓசூர் பிரதான சாலையில் உள்ள கடைவீதியில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளதால் இதனை அகற்றி புதிய மின்கம்பத்தை சற்று தள்ளி உள்பக்கமாக அமைத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும். எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-அன்வர், பாலக்கோடு.

மேலும் செய்திகள்