பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர், கோபி போன்ற நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலை தட்டாங்குட்டை. இங்கு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களின் இடையே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. மின்கம்பிகள் தொங்கியபடி குறுக்கே செல்வதால் வாகனங்கள்மின் கம்பியில் உரசும் வாய்ப்பு இருக்கிறது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பே மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.