ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தே.கொல்லப்பட்டி அருந்ததியர் காலனியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் விஷபூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் முதியவர்கள், பள்ளி குழந்தைகள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெரு விளக்குகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோவன், சேலம்.