கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே குளத்துப்பாளையம் எஸ்.எஸ்.எஸ். அவென்யூ பகுதியில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள் மீது உரசி மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகளை உயர்த்தி அமைக்க மின்சாரவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.