பல்லடத்தில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் எரிகிறது. இதனால் பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய எரியாமல் இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனால் மின்சாரம் இருந்தும், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. எனவே உரிய நேரத்தில் விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.