திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தில் நடுபகுதி விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் விழ வாய்ப்புள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோகரத்தினம், மல்லசமுத்திரம்.