கொல்லிமலைக்கு செல்லும் வழியில் முதல் கிராமமாக சோளக்காடு உள்ளது. இந்த சோளக்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கொல்லிமலையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் மலையில் உயரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்வோருக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் கிடைக்காமல் இருந்து வருகிறது. மேலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின்கம்பத்தை சாலையோரம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
-விஜய்செல்வம், சோளக்காடு.