மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-01-05 13:34 GMT

தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் வழியில் அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தம், செட்டிப்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளன. இந்த பஸ் நிறுத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இதன் காரணமாக தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும். ேமலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்ைகயாக உள்ளது.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்