ராசிபுரம் காட்டூர் சாலையில் சந்திரசேகரபுரம் மற்றும் அணைப்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. சாய்ந்தவாறு காணப்படும் இந்த மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் அடியோடு விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுநாதன், ராசிபுரம்.