சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-12-22 13:35 GMT

பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள மாரியப்பசெட்டி தெரு, சிவன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் மின்கம்பத்தின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. எனவே குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைப்பார்களா?

-ஸ்ரீதரன், பாலக்கோடு.

மேலும் செய்திகள்