பள்ளிபாளையம் ராஜ வீதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வழியில் தனியார் புக் கடை அருகே சாலையோரம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் தான் தெருவிளக்குகளை ஆன்-ஆப் செய்யும் சுவிட்ச் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கீழே செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ளவர்களும், தெருவிளக்கை போட வருபவா்களும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகுல், பள்ளிபாளையம்.