வெண்ணந்தூர் அடுத்த தொட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேமூர் பெரிய ஏரி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு அணைக்கபடாமல் பகல் முழுவதும் எரிகிறது. இதனால் வீண் மின்சார செலவு ஏற்படுவது உடன் விரைவில் தெருவிளக்கு பழுதடைகிறது. மேலும் மின்கம்பத்தின் அருகே உள்ள செடி, கொடிகள் மின்கம்பியில் உரசியபடி உள்ளது. இதனால் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் பகலில் மின் விளக்கை பகலில் அணைக்கவும், உரசிய படி இருக்கும் செடி, கொடிகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-மணி, தொட்டிப்பட்டி.