கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் தெருவிளக்கு வசதி சரிவர இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் பல இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் அங்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.