ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரம் குமரன் மகால் செல்லும் வேலூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். ஆகையால் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
-கீர்த்திவாசன், ஆற்காடு.