திருவண்ணாமலை குன்றக்குடி நகர் பகுதியில் மின் கம்பம் சாய்ந்த நிலையம் காணப்படுகிறது. மின்கம்பம் அருகே அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தக் மின்கம்பம் இருக்கும் வழியாக தினமும் 1000 கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மின்கம்பம் கீழே சாய்ந்து விடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விஜய், திருவண்ணாமலை