பயனற்ற மின் விளக்கு

Update: 2026-01-25 10:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராம ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதப்பட்டி கிராமத்தில் மந்தியப்பிடாரியம்மன் கோவில் அருகே உயர்கோபுர மின் விளக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டதிலிருந்து சில மாதங்கள் மட்டுமே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த உயர்கோபுரமின் விளக்கு எரியாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் இப்பதியை கடக்க அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்