திருவள்ளூர் மாவட்டம் பெருங்காவூர் கிராமம் பார்த்தசாரதி 2-வது தெருவில் மார்டன் டவுண் பகுதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் கான்கீரிட் பெயர்ந்து, மின்கம்பம் கீழே விழுவது போல உள்ளது. எப்போதுவேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்து தரவேண்டும்.