திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியாபட்டி கிராமத்திற்கு ஏரிக்கரை வழியாக செல்லும் சாலை ஓரத்தில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் சாய்ந்து, ஏரி நீரில் விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.